ருசியியல் – 22

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் ஓர் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரம் ரெஃப்ரிஜிரேட்டரில் ஒரு பூண்டு டப்பா வைத்திருப்பான். மொத்தக் குளிர்சாதனப் பெட்டியையும் அதன் நெடி நாறடித்துக்கொண்டிருந்தாலும் தன்னிடம் பூண்டு இல்லவே இல்லை என்று சாதிக்கப் பார்ப்பான். கையும் பூண்டுமாக ஒரு கட்டத்தில் பிடிபடும்போது ஆவேசமடைந்து அந்தப் பூண்டு ஊறுகாய் டப்பாவைத் திறந்து சிங்க்கில் கொட்டிக் கழுவிவிடுவான். குளிர் சாதனப் பெட்டி அளவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பூண்டின் நெடி, அப்போது அபார்ட்மெண்ட் முழுதும் ஆளத் தொடங்கும். அந்தக் கதாபாத்திரத்தின் விவரிக்க … Continue reading ருசியியல் – 22